×

கொருக்கை சாய் ஸ்ரீநிவாஸ் மெட்ரிக் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த தின விழா

திருத்துறைப்பூண்டி, அக்.18: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொருக்கை சாய் ஸ்ரீநிவாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி, பேச்சுப்போட்டி நடைபெற்றது. மற்றும் பள்ளி வளாகத்தை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் பள்ளி நிறுவனரும், பாலமுருகன் மருத்துவமனை நிர்வாக இயக்குனருமான டாக்டர் புஷ்பா, தாளாளர் பொறியாளர் கிருஷ்ணகுமார், பள்ளி முதல்வர் தனசேகரன், ஆசிரியர்கள் ரூபி ஜனனி, உடற்கல்வி ஆசிரியர் சாமுண்டீஸ்வரி, முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன் நன்றி கூறினார்.

Tags : Abdulkalam Birthday Celebration ,Karunagai Sai Srinivas Matric School ,
× RELATED திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து...