×

விவசாயிகள் கோரிக்கை கேரம் விளையாட்டு போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு

திருவாரூர், அக்.18: திருவாரூர் கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவாரூர் பிரிவின் மூலம் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் இன்று (18ம் தேதி) மற்றும் நாளை (19ம் தேதி) ஆகிய 2 தினங்கள் பவித்திரமாணிக்கத்தில் உள்ள கேம் பைன் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நடைபெறுகிறது. இதில் மழலையர் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் முதுநிலை பிரிவில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இன்று மாணவர் மற்றும் மாணவிகளுக்கு இளநிலை பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளும், நாளை (19ம் தேதி) முதுநிலை நிலை பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளும் நடைபெறும். காலை 8 மணி முதல் நடைபெறும் இந்த போட்டிகளில் ஒரு பள்ளியில் இருந்து 2 ஒற்றையர் மற்றும் 2 இரட்டையர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மாவட்ட போட்டிகளில் வெற்றிபெறுபவர்கள் மாநில போட்டிக்கு அரசு செலவில் அழைத்து செல்லப்படுவர். மாவட்ட போட்டிகளில் கலந்து கொள்வதற்கு பயணப்படி, தினப்படி எதுவும் அளிக்கப்படமாட்டாது. போட்டியில் கலந்துகொள்பவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags : Farmers Demand Carrom Game Competition ,
× RELATED பாழானது படிப்பு; வீணானது பட்ட கஷ்டம்...