×

கீழமருதாந்தநல்லூர் ஊராட்சியின் சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, அக்.18: கீழமருதாந்தநல்லூர் ஊராட்சியின் சீர்கேட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீழமருதாந்தநல்லூர் ஊராட்சியின் சீர்கேட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட துணைச்செயலாளர் ராஜேஷ் தலைமை வகித்தார். கீழமருதாந்தநல்லூர் ஊராட்சி நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து பலமுறை மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே போர்க்கால அடிப்படையில் சரிசெய்திட வேண்டும், மயிலாடுதுறையிலிருந்து சேத்தூர் வரை செல்லும் அரசு பேருந்தை தொடர்ந்து இயக்க வலியுறுத்த வேண்டும். கீழமருதாந்தநல்லூர், பொன்வாசநல்லூர் வருவாய் கிராமத்திற்கு பயிர் காப்பீட்டு தொகையை குறைத்து வழங்கிய ஆனந்ததாண்டவபுரம் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Tags : protest ,
× RELATED மனிதநேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்