×

கோடியக்கரையில் டெங்கு கொசு உற்பத்தி காரணிகள் அழிப்பு பணி

வேதாரண்யம், அக்.18: வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை ஊராட்சியில் டெங்கு தூய்மை பணி நடைபெற்றது. தமிழகத்தின் வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ள நிலையில் மழை நீர் தேக்கத்தில் உண்டாகும் டெங்கு கொசுக்களை அழிப்பதற்கு கோடியக்கரை ஊராட்சியில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் தூய்மை பணி நடைபெற்றது. கோடியக்கரை ஊராட்சி முழுவதும் சுமார் 400 வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டி தண்ணீர் தேங்கும் இடங்களில் மருந்து ஊற்றப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் டயர் மற்றும் குப்பைகள் அகற்றும் பணியும் நடைபெற்றது.தூய்மை பணியில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் கஸ்தூரி, ஊராட்சி செயலாளர் சுபா, முன்னாள் மீனவர் கூட்டுறவு சங்க செயலாளர் சித்ரவேலு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kodiyakarai ,
× RELATED மருத்துவர் தினமான இன்று கொரோனா...