அங்கன்வாடி பழுதால் மழைநீர் கொட்டும் அவலம்

குன்னூர், அக்.18: குன்னூர் ஓட்டுபட்டரை பகுதியில் உள்ள அங்கன்வாடிக்கு சுற்றுப்பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். அங்குள்ள மக்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்து வருவதால் தங்களது குழந்தைகளை அங்கன்வாடியில் விட்டு செல்கின்றனர்.  இந்த கட்டிடம்  பராமரிப்பின்றி உள்ளதால் மழை அதிகளவில் பெய்யும்போது மழைநீர் உள்ளே கொட்டுகிறது. இதனால் அங்குள்ள ஊழியர்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர். இதனால் அங்கன்வாடிக்கு தங்களது குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சமடைந்து வருகின்றனர். பெரியளவில் விபத்து ஏற்படுவதற்கு முன் மாவட்ட நிர்வாகம் உடனடியாக  நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Anganwadi ,
× RELATED ₹6.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது...