×

அரசு முதன்மை செயலாளர் தகவல் ஊதியக்குழு அறிக்கை உடனே வெளியிட கோரி ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகை,அக்.18: ஊதியக்குழு அறிக்கை உடனே வெளியிட வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை வலியுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் நாகையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் தமிழ்செழியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ்கண்ணன் வரவேற்றார். நிர்வாகிகள் ஆடியபாதம், பழனிவேல், தியாகராஜன், சீத்தாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் பிரகாஷ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஊதியக்குழு அறிக்கை உடனே வெளியிட வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தனித்துறை ஏற்படுத்த வேண்டும். நியாயவிலை கடைகளுக்கு வழங்கும் பொருட்கள் அனைத்தும் பொட்டலங்களில் அடைத்து விநியோகம் செய்ய வேண்டும். அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நாகையை தலைமையிடமாக கொண்டுள்ள நாகை பொதுப்பணியாளர் கூட்டுறவு பண்டகசாலையை மொத்த விற்பனை கூட்டுறவு பண்டக சாலையாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட பொருளாளர் கஜபதி நன்றி கூறினார். நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்டத்தில் உள்ள 656 ரேஷன் கடைகளில் 326 கடைகள் மூடப்பட்டன. இதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அத்தியவாசிய பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளானார்கள்.

Tags : release ,Ration shop workers ,Chief Secretary ,Government ,
× RELATED தடையின்றி குடிநீர் விநியோகம், கோடைகால...