×

இடதுசாரிகள் குற்றச்சாட்டு ஆசிரியர்களுக்கு முன்னெடுப்பு பயிற்சி

வேதாரண்யம், அக்.18: வேதாரண்யம் வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு ஒன்றியங்களை சேர்ந்த அரசு தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு தேசிய அளவிலான தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு பயிற்சி நடைபெற்றது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட திட்ட அலுவலர் பீட்டர், பிரான்சிஸ் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் முருகையன், வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார், தாமோதரன், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் தேன்மொழி ஆகியோர் துவக்கி வைத்தனர். ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் மாசிலாமணி, ஆறுக்காட்டுத்துறை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வைத்தியநாதன், ஆசிரியர் பயிற்றுநர்கள் சுந்தர், ஷாஜிக்குமார், மாரிமுத்து, பாண்டிகுமார் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டு பயிற்சியினை வழங்கினர்.

Tags : accusation teachers ,
× RELATED வத்தலக்குண்டுவில் தலைமை பண்பு பயிற்சி முகாம்