×

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உரக்கடைகளில் வேளாண் அலுவலர் திடீர் சோதனை

தரங்கம்பாடி, அக்.18: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள உரக்கடைகளில் வேளாண் இணை இயக்குனர் திடீர் சோதனை நடத்தினார். சம்பா சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில் உரக்கடைகளில் உரங்கள் சரியான விலைக்கு விற்கப்படுகிறதா, இருப்பு விபரம் முறையாக உள்ளதா என்பது குறித்து செம்பனார்கோவில் வட்டாரத்தில் செம்பனார்கோவில், ஆக்கூர், திருக்கடையூர் உள்ளிட்ட பகுதிகளில் நாகை வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம் திடீர் சோதனை நடத்தினார். அதன் பின் அவர் கூறியதாவது:

சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் செம்பனார்கோவில் வட்டாரத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே இந்தாண்டு உரத் தட்டுப்பாடு ஏற்படாது. விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாடு ஏற்பட்டால் அந்த பகுதியில் உள்ள வேளாண் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார். சோதனையின் போது தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் குமரன், செம்பனார்கோவில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் திருமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : checking ,Officer ,area ,
× RELATED எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க...