×

தொடர் மழையால் ஆலய தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து சேதம்

குன்னூர், அக்.18: குன்னூர் தொடர்ந்து பெய்த மழையில் பழமை வாய்ந்த புனித  ஜான் ஆலயத்தின் தடுப்புச்சுவர் இடிந்து  சேதம் அடைந்துள்ளது. குன்னூர் பகுதிகளில் தொடர்ந்து ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் வீணாகியுள்ளது. இந்த நிலையில் குன்னூரில் பழமை வாய்ந்த புனித ஜான் ஆலயத்தின் முன்புறம் இருந்த தடுப்புச்சுவர் மழை நீர்  செல்லமுடியாமல் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இடிந்து விழும்போது அந்த பகுதியில் பொது மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags :
× RELATED கனமழையால் ஊட்டி பூங்காக்களில் அழுகி உதிரும் மலர்கள்