×

காந்தி சாலையில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணி தோண்டிய பள்ளத்தை மூடாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர்: கரூர் காந்திசாலையின் மையப்பகுதியில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தினை விரைந்து மூடிட வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கருர் நகராட்சிக்குட்பட்ட முத்துராஜபுரம் பகுதியில் காந்திசாலை பகுதி உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் நெருக்கமாக குடியிருப்புகள் உள்ளன. இருப்பினும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன போக்குவரத்து இந்த சாலையில் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலையின் மையப்பகுதியின் உட்புறம் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது.

இது குறித்து இந்த பகுதியினர் நகராட்சிக்கு புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில் குடிநீர் பிரச்னையை சீர் செய்யும் வகையில் பள்ளம் தோண்டி சரி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததால் அனைத்து வாகன ஓட்டிகளும் சாலையை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் குடியிருப்பவர்களும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, பணிகளை விரைந்து முடித்து குழாயை விரைந்து மூடிட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : Motorists ,closure ,Gandhi Road ,
× RELATED சாலைகளில் திரியும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் அவதி