×

ஏரியின் கரையோரங்களில் கட்டிட கழிவுகள் சதுப்பு நிலங்கள் பாதிக்கும் அபாயம்

ஊட்டி, அக்.18: ஊட்டி அருகேயுள்ள மரவியல் பூங்கா அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் சதுப்பு நிலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உட்பட சில இடங்களில் மட்டுமே சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஊட்டி ஏரியை சுற்றியுள்ள மரவியல் பூங்கா, மான் பூங்கா மற்றும் புதிய படகு இல்லம் போன்ற பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் குப்பைகள் கொட்டவோ அல்லது கட்டுமான பணிகளை தொடரவோ சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விடுவதில்லை. இதனால், இப்பகுதியில் உள்ள சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது இந்த சதுப்பு நிலங்களில் சிலர் குப்பைகள் கொட்டுவது, கட்டிட கழிவுகளை கொட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊட்டி மரவியல் பூங்காவில் இருந்து படகு இல்லம் செல்லும் சாலைேயாரங்களில் ஏரியின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் சிலர் கட்டிட கழிவுகளை கொட்டி வருகின்றனர். இரவு நேரங்களில் இப்பகுதிக்கு சென்று சிலர் குப்பைகளை கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால், இப்பகுதியில் உள்ள சதுப்பு நிலங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சதுப்பு நிலங்களில் கட்டிட கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் அல்லது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : lake ,banks ,
× RELATED மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்