×

அரவக்குறிச்சியில் மகான் காயலா பாவா தர்கா 130ம் ஆண்டு சந்தனக்கூடு விழா

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் மகான் காயலாபாவா தர்காவின் 130வது ஆண்டு சந்தனக்கூடு விழா நடைபெற்றது. அரவக்குறிச்சியின் மேற்கே அடக்கமாகியுள்ள மகான் காயலாபாவாவின் தர்கா சந்தனக்கூடு விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். அதே போல இந்த ஆண்டும் 130வது ஆண்டாக சந்தனக்கூடு கொடியேற்றம் மற்றும் கொடி குதிரை ஊர்வலத்துடன் கடந்த 1ம் தேதி துவங்கியது. இதன் கடைசி நிகழ்ச்சியாக சந்தனக் கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தர்கா வளாகத்திலிருந்து சந்தனக் கூடு ஊர்வலமாக புறப்பட்டு தர்கா தெரு, பெரிய கடைவீதி, சின்னதாராபுரம் ரோடு, பூப்பந்ததல் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மகான் காயலாபாவா தர்கா வளாகம் வந்தடைந்தது. பின்னர் துஆ ஓதி தப்ரூக் என்னும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Sandanakoodu Festival ,Mahakan Kayla Bhava Dharga ,
× RELATED புறவழிச்சாலையை தவிர்த்து...