×

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சித்த மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு நோயாளிகள் கூட்டம் அதிகரிப்பு

கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் சித்தா மருத்துவ பிரிவுக்கு நாளுக்கு நாள் மக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு பிரிவுகள் செயல்படுகிறது. இதில் சித்தா மருத்துவ பிரிவும் செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவின் சார்பில் தினமும் 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மழைக்கால சீசன் என்பதால் கடந்த மாதத்தை விட, சில வாரங்களாக நிலவேம்பு கசாயம் அருந்துவதற்கும், பிற சிகிச்சை மேற்கொள்வதற்கும் தினமும் 300க்கும் மேற்பட்டோர் வந்து செல்வதாக சித்தா பிரிவு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பொது மருத்துவமனை பிரிவு, காய்ச்சல் வார்டு போன்ற பகுதிகளில் வரும் நோயாளிகளின் அளவுக்கு நிகராக சித்தா மருத்துவ பிரிவுக்கும் அதிகளவு மக்கள் வந்து செல்வதால் இந்த வளாக பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Medical College Hospital ,
× RELATED சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்...