மாவட்டத்தில் ஒரே நாளில் 208 மி.மீ. மழை

வடகிழக்கு பருவமழை துவங்கிய முதல் நாளே மாவட்டத்தில் 208 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:- அன்னூர் 12, விமானநிலையம் 15.6, மேட்டுப்பாளையம் 52, சின்கோனா 9, சின்னகல்லார் 16, வால்பாறை 8மி.மீ, வால்பாறை தாலுக்கா 7, சோலையாறு 11, ஆழியார் 2.4, சூலூர் 5, பொள்ளாச்சி 25, கோவை தெற்கு 15, பெரியநாயக்கன்பாளையம் 7, வேளாண் பல்கலைக்கழகம் 23 என மொத்தம் 208 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதாவது, சராசரியாக 14.86 மி.மீ மழை பெய்துள்ளது. மேலும், இன்று, நாளை என இரண்டு நாட்கள் மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனவும், 40 மி.மீ. முதல் 50மி.மீ. மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் வேளாண் காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: