ராவ் மருத்துவமனையின் எண்டோஸ்கோபிஸ்ட் மாநாடு இன்று துவக்கம்

கோவை, அக். 18:  கோவை ராவ் மருத்துவமனையின் சார்பில் ஸ்டார் எண்டோகின் மாநாடு இன்று நடக்கிறது. இது குறித்து ராவ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஆஷா ஆர் ராவ், டாக்டர் தமோதர் ராவ், டாக்டர் பானுமதி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏஐஜிஇ சார்பில் ‘ஸ்டார் எண்டோகின் கான்க்ளேவ் கோயம்புத்தூர் 2019’ இன்று (18ம் தேதி) முதல் 20ம் தேதி மூன்று நாட்கள் கோவை தி ரெசிடென்சி டவர்சில் நடக்கிறது. தமிழகத்தில் ஏஐஜிஇ-யின் இணை செயலாளராக டாக்டர் தாமோதர் ஆர் ராவ், குழு உறுப்பினராக டாக்டர் ஆஷா ராவ் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், முதல்நாள் மாநாட்டில் ஹிஸ்டரோஸ்கோபி, லேப்ரோஸ்கோபி, கருவுறாமை மற்றும் அல்ட்ராசவுண்ட் குறித்து நடக்கிறது. இதில், சுமார் 200 மருத்துவர்கள் பங்கேற்கின்றனர். 19ம் தேதி ராவ் மருத்துவமனையில் இருந்து நேரடி எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள் செய்யப்படவுள்ளது. சுமார் 300 மருத்துவர்கள் பங்கேற்று மொத்தம் 100 விரிவுரைகள் நடக்கிறது. சர்வதேச பேராசிரியர் ரிச்சார்ட் பென்கெத் (யுகே), ஐஏஜிஇ-யின் தலைவர் டாக்டர் சுனிதா தந்துல்வட்கர் மற்றும் டாக்டர் ஷிரிஷ் ஷெத், டாக்டர் மோகன் காமத் மற்றும் டாக்டர் அபா மஜும்தார் பங்கேற்கின்றனர். இதில், பாதுகாப்பான எண்டோஸ்கோபி, கருவுறாமைக்கு சிகிச்சையளித்தல் மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் குறித்து மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர்.

Related Stories: