இந்து முருகேசனுக்கு விருது

கோவை, அக்.18: கோவை கலைஞர் கருணாநிதி தொழில் நுட்ப கல்லூரியின் துணை தலைவர் இந்து முருகேசனுக்கு நிறுவன சமூக பொறுப்புக்கான நடப்பாண்டிற்கான உயரிய பெண்மணி விருது வழங்கப்பட்டது. ஜெனிவாவின் சர்வதேச தொலை தொடர்பு யூனியனின் துணை பொது செயலாளர் மால்காம் ஜான்சன், ஐக்கிய அரபு அமிரேட்ஸ் தூதர் அகமது அல் பன்னா, பேராசிரியர் கோயல் ஆகியோரால் கடந்த 15ம் தேதி வழங்கப்பட்டது. 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கிட் இன்போநெஸ்ட் மூலமாக இணைய பாதுகாப்பு, ஹேக்கிங் நெறிமுறை, மொபைல் ஹேக்கர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடத்தியதற்காக வழங்கப்பட்டது. விருது பெற்றதற்கு கல்லூரி நிறுவன தலைவர் பொங்கலூர் பழனிசாமி, முதல்வர் மோகன்தாஸ் காந்தி, சுரேஷ், ரமேஷ் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Advertising
Advertising

Related Stories: