கொள்ளையடிக்க திட்டம் சூலூரில் 3 பேர் கைது

சூலூர், அக்.18: சூலூரை அடுத்த பூரண்டாபாளையத்தைச்  சேர்ந்தவர் குப்புசாமி. இவர் நேற்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பநாய்க்கன்பட்டி பகுதியில் உள்ள குட்டைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு 3 பேர் பேசிக்கொண்டிருந்தனர். சந்தேகமடைந்த அவர் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். போலீசார் எங்கு சென்று விசாரித்ததில், அவர்கள் தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஷ் (29), நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கோகுல், மதுரையைச் சேர்ந்த சக்திவேல் என்பதும் அவர்கள் மூவரும் அப்பகுதியில் பூட்டிய  வீட்டை உடைத்து கொள்ளயடிக்க திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்த்து. அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையிலடைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: