மாவட்டத்தில் பரவலாக மழை

ஈரோடு, அக்.18:ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 15.4 மி.மீ.,மழை அளவு பாதிவாகி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே துவங்கி உள்ளதையடுத்து ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி மழையளவு (மி.மீட்டரில்): ஈரோடு 19, பெருந்துறை 12, கோபி 8, சத்தி 25, பவானிசாகர் 24.4, பவானி 8.8, கொடுமுடி 14.6, நம்பியூர் 13, சென்னிமலை 21, மொடக்குறிச்சி 15, கவுந்தப்பாடி 9, எலந்தை குட்டைமேடு 16.4, அம்மாபேட்டை 3.4, கொடிவேரி 12.2, குண்டேரிப்பள்ளம் 45, வரட்டுப்பள்ளம் 13.4 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 96.98 அடியாகும். நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைக்கான நீர் வரத்து வரத்து 5,699 கனஅடியாக உள்ளது. மாவட்டத்தின் பரவலாக மழை பெய்து வருவதால் அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் 2,300 கன அடியில் இருந்து 1,500கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் வரும் 2,692 கனஅடி மழை நீரானது காவிரியில் கலந்து வருகிறது.

Related Stories: