×

விபத்தில்லா தீபாவளியை கொண்டாட பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்

கந்தர்வகோட்டை, அக்.17: கந்தர்வகோட்டையில் நகர் முழுவதும் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். தீபாவளி பண்டிகை வருகிற 27ம்தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் ஒன்பது நாட்களே உள்ள நிலையில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன் தீயணைப்பு நிலைய நிலைய அலுவலர் ஆரோக்கியசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு விபத்தில்லா தீபாவளி எவ்வாறு கொண்டாடுவது என விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதேபோல் நகர்முழுவதும் முழுவதும் துண்டு பிரசுரங்களை வழங்கினர். கந்தர்வகோட்டை ஒன்றியம் முழுவதும் பள்ளிகளிலும் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து மாணவ, மாணவிகளிடையே பிரசாரம் செய்து வருகின்றனர்.

Tags : public ,Diwali ,
× RELATED புதுச்சேரியில் மின்விநியோகத்தை...