இலவச மருத்துவ முகாம்

கும்பகோணம், அக். 17: கும்பகோணத்தில் சமையல் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் ரத்த பரிசோதனை முகாம் நடந்தது.தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் மகேந்திரன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். சிறப்பு மருத்துவராக டாக்டர் ஆதித்யா இந்தியன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் மற்றும் டிஎஸ் மணி பங்கேற்றனர். முகாமில் 500க்கும் மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சை மற்றும் டெங்கு, சிக்குன் குன்யா போன்ற காய்ச்சல் குறித்து ரத்த பரிசோதனையும் நடந்தது.

Related Stories: