மின் கம்பத்தில் படரும் கொடியால் விபத்து அபாயம்

திருப்பூர், அக். 17:  திருப்பூர் மின்பகிர்மான வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில், தனியார் ஒப்பந்த பணியாளர்கள் வாயிலாக பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. ஆனால் இவர்களை நிர்வகிக்க மின்வாரிய அதிகாரிகள் முனைப்பு காட்டுவதில்லை. இதனால் பல இடங்களில் நீண்ட காலமாக மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களை சுற்றி செடி, கொடிகள் அகற்றப்படாமல் புதர் மண்டிக்கிடக்கின்றன. தவிர தேவையற்ற செடிகள் மின் கம்பங்களிலும், மின் கம்பிகளிலும் படர்ந்து வளர்கின்றன. அதன்படி, திருப்பூர் மாநகராட்சி 2வது வார்டு பாரதிநகர் வீதியில், உள்ள மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, மின் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஏதேனும் ஆபத்து ஏற்படும் முன் செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: