×

மழைநீரை சேமிக்கும் வகையில் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

கும்பகோணம், அக். 17: மழைநீரை சேமிக்கும் வகையில் வாய்க்கால், ஏரி, குளங்களை தூர்வார வேண்டுமென ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.கும்பகோணத்தில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க வட்ட கிளை கூட்டம் நடந்தது. கிளை தலைவர் முஹம்மது ஜாகீர் தலைமை வகித்தார். தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ருத்ராபதி, மாவட்ட செயலாளர் நடராஜன், பொருளாளர் அய்யப்பன் முன்னிலை வகித்தனர். வட்ட கிளை துணைத்தலைவர் அம்பிகா வரவேற்றார்.

கூட்டத்தில் தற்போது பெய்து வரும் மழைநீரை சேமிக்க தமிழகத்தில் தூர்வாராத ஏரி, வாய்க்கால்கள், குளங்களை தூர்வார வேண்டும். அரசு பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு வழங்க வேண்டிய 5 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணை தலைவர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags : lakes ,Government Employees Union ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 71.91 சதவீதம் நீர் இருப்பு..!!