×

உலக மனநல நாள் தினத்தையொட்டி தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மன்னார்குடி, அக். 17: உலக மனநல தினத்தையொட்டி மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை, தற்கொலை தடுப்பு விழிப் புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட மனநல திட்டத்தின் சார்பாக உலக மனநல தினத்தையொட்டி மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை, தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் உலகநாதன் முன்னிலை வகித்தார். மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உளவியல் ஆலோசகர் யோகாம்பாள் பங்கேற்று பேசினார்.நிகழ்ச்சியில், இளம் பருவத்தில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள், உடல், மன தேவைகள், மனவெழுச்சி, தற்கொலை எண்ணங்கள், எண்ண அலைகளின் தாக்கத்தால் ஏற்படும் கனவு ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags :
× RELATED திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து...