×

நெகிழிக்கு பதிலாக துணிப்பை தயாரித்து விநியோகித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு விருது

முத்துப்பேட்டை, அக்.17: முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக்குக்கு பதிலாக துணிப்பை தயாரித்து விநியோகம் செய்ததை பாராட்டி அப்துல்கலாம் கல்வி அறக்கட்டறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தூய்மை பணிகளும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்ம திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையின் சார்பில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதில் பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றத்தின் மாணவர்கள் நெகிழிக்கு பதிலாக துணிப்பை சொந்தமாக தயாரித்து விநியோகம், மரக்கன்றுகள் நடுதல் போன்ற சிறப்பான செயல்பாடுகளை செய்து வருவதை பாராட்டி சுற்றுச்சூழல் மன்ற மாணவர் தலைவர் ரகுராமனுக்கு சிறந்த சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை அறக்கட்டளையின் மாவட்ட பொறுப்பாளர் வெங்கட் வழங்கினார்.
நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் சொக்கலிங்கம், முருகபாஸ்கரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்தண்ணா, அசிரியர் பயிற்றுநர் சுரேஷ், ஜூனியர் ரெட்கிராஸ் வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வசிதம்பரம், இயற்கை ஆர்வலர் நந்தா ஜீவானந்தம், ஆசிரியர்கள் முத்துலட்சுமி, இந்திரா, அமிர்தம், முருகேசன், செல்வகுமார், மேகநாதன், நிவேதா, அகல்யா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags : State School ,
× RELATED சேந்தன்குடி அரசுப்பள்ளியில் திறன்...