×

திருத்துறைப்பூண்டியில் 8 மணி நேரம் மின் தடை

திருத்துறைப்பூண்டி, அக்.17: திருத்துறைப்பூண்டி பகுதி நேற்று முன்தினம் காலை 9.30 மணி அளவில் மின்தடைஏற்பட்டது.இது அறிவிக்கப்படாத மின்தடைஎன்பதால் மின்சாரம் வந்து விடும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆவலுடன் இருந்தனர்.ஆனால் மின்தடை நீடித்து மாலை 5.30 மணியளவில் வந்தது.அறிவிக்கப்படாத 8 மணி நேரம் மின் தடையால் பொதுமக்கள், வர்த்தகர்கள், வயதானவர்கள், குழந்தைகள், நோயாளிகள்என அனைவரும் அவதியடைந்தனர்.


Tags : Tirupur ,
× RELATED திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில்...