×

திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை அமைக்கும் பணியை துவங்க வேண்டும் சட்டமன்றமனுக்கள் குழுவுக்கு கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, அக்.17: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த சட்டமன்றமனுக்கள் குழுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.இதுகுறித்து திருத்துறைப்பூண்டி பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் தமிழ்நாடு சட்டமன்றமனுக்கள் குழுவிற்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகரம் வளர்ந்து வரக்கூடியநகரம், இந்த நகரத்தில் நாளுக்கு நாள் இருசக்கர நான்கு சக்கரவாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக பல்வேறு நகரங்களுக்கு உப்பு, சவுக்கு மரங்கள் ஏற்றி செல்லக்கூடிய பெரிய கனரக வாகனங்களாலும், போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டே வருகிறது.

இதனால் சாலைகளில் அதிகமான விபத்துகள் ஏற்படுவதுடன் குறித்த நேரத்தில் பேருந்துகள் வெளியேற முடியாமலும், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், மருத்துமனைக்கு செல்லும் நோயாளிகள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாதநிலை உள்ளது. நாகப்பட்டினம் சாலையில் இருந்து, நகரை சுற்றி திருவாரூர் சாலையில் வந்து இணைத்து புறவழிச்சாலை திட்டம் இணைக்க திட்டமதிப்பீடு செய்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கியநிலையில் சாலை அமையும் பகுதி திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமாக இருந்ததால் இந்து சமயஅறநிலைய துறைக்கு பணபரிவர்த்தனை செய்யாத காரணத்தினால் பணிகள் ெதடைஏற்பட்டது. தற்போது பணபரிவர்த்தனை முடிந்தும், நெடுஞ்சாலை துறைக்கு அரசு நிதி ஒதுக்காததால், புறவழிச்சாலை அமைக்க தடை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உடனடியாக நிதி ஒதுக்கி, புறவழிச்சாலை பணிகளை தொடங்க வேண்டும். மேலும் திருவாரூர் சாலையில் இருந்து மன்னார்குடி சாலையை இணைக்க தேவையான புறவழிச்சாலை நிதி ஒதுக்க வேண்டும், இதன் மூலம் திருத்துறைப்பூண்டி நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் குறைந்து பொதுமக்களுக்கு மிகுந்த நன்மை ஏற்படும் எனமனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : Legislative Council Committee ,roadway ,start ,Tirupati ,
× RELATED நேமம் வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்