×

தீபாவளி பலகாரங்களில் செயற்கை நிறம் பயன்படுத்தினால் நடவடிக்கை

ஈரோடு, அக்.17:  ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், பேக்கரி, இனிப்பு மற்றும் காரம் உணவுப்பொருட்கள் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பான தயாரிப்பு முறை குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் கார உணவுப்பொருட்கள் தயாரிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. பின்னர், கலெக்டர் கதிரவன் பேசியதாவது: உணவு பொருள் தயாரிப்பு அளவை பொருத்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். உரிமம் இல்லாமல் உணவு பொருட்களை தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் இடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். பாதுகாப்பான குடிநீர் பயன்படுத்துவதோடு இனிப்பு தயாரிப்பில் இயற்கை நிறங்கள் சேர்க்கப்படலாம். அதேபோல், செயற்கை நிறங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறக்கூடாது. கார உணவுபொருட்களில் எக்காரணம் கொண்டும் செயற்கை வண்ணங்கள் சேர்க்கக்கூடாது.தயாரிப்பு தேதி, பேக்கிங் தேதி இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது. ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. ஈரோடு மாவட்டத்தில் உணவு பொருள் தரம் குறைவு குறித்த புகார்கள் இருந்தால் உணவு பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம்.

Tags : Diwali ,
× RELATED ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது