×

மாயார் கிராமத்தில் பூண்டு விளைச்சல் அமோகம்

கூடலூர், அக்.17:  கூடலூரை அடுத்துள்ள மசனகுடி ஊராட்சிக்கு உட்பட்ட மாயார் கிராமத்தில் காய்கறி பூண்டு உள்ளிட்ட விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பூண்டு விவசாயம் நடைபெற்று வந்தாலும் மிதமான தட்ப வெப்ப காலநிலை கொண்ட மாயார் பகுதிகளில் விளையும் வெள்ளைப் பூண்டிற்கு வெளி மாநிலங்களில் நல்ல கிராக்கி உள்ளது. மே மாதத்தில் பயிரிடப்பட்ட பூண்டு தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றது.

இதில் முதல் தர பூண்டிற்கு கிலோ ஒன்றிற்கு   250 விலை ரூபாயும், இரண்டாம் தரம் மற்றும் மூன்றாம் தரத்திற்கு 150, 100 ரூபாய் வரையும் கிடைக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ள பூண்டு அறுவடை செய்யப்பட்டு வட மாநிலங்களுக்கு விற்பனைக்கு  அனுப்பப்பட்டு வருவதாகவும் இந்த வருடம் இப்பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாகியதால் உற்பத்தி ஒரளவு பாதித்துள்ளதாகவும் நல்ல விலை கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : village ,Mayar ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...