பல்வேறு நடைமுறைகள் பற்றி நெல் சாகுபடியில் தொழில்நுட்ப பயிற்சி

திருச்சி, அக்.17: திருச்சி வேளாண் அறிவியல் நிலையத்தில் நெல் சாகுபடியில் பல்வேறு நடவு முறைகள் பற்றி தொழில்நுட்ப பயிற்சி நடத்தப்பட்டது.நெல் சாகுபடியில் பல்வகை நடைமுறைகளில் முக்கியமான செம்மை நெல் சாகுபடி, இந்திர நெல் நடவு முறை, நேரடி விதைப்பு மற்றும் மானாவாரி நேரடி நெல் விதைப்பு உள்ள மிக முக்கியமான தொழில்நுட்பங்களில் உள்ள விதை நேர்த்தி, பருவத்திற்கு ஏற்ற ரகம், உழவியல் முறைகள், சிறப்பு பாய் நாற்றங்கால் அமைத்தல், உர மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றி பயிற்சி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் திட்ட ஒருங்கிணைப்பாளர் நூர்ஜஹான் ஹனீப், நெல் சாகுபடி தொழில் நுட்ப பேராசிரியர் திலீப்குமார், வேளாண் அறிவியல் நிலைய துணை பேராசிரியர்கள் தனுஷ்கோடி, சரண்ராஜ், அலுவலர்கள் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து விவசாயிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: