×

வேலை தேடுபவர்கள் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம்

கோவை, அக். 17: வேலை தேடுபவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களுக்கு உரிய பொருத்தமான தொழில்நெறியைத் தேர்வு செய்ய மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம் என மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் அனைத்து மாவட்ட வேலை தேடுபவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களுக்கு உரிய பொருத்தமான தொழில்நெறியைத் தேர்வு செய்ய உதவிடும் வண்ணம் தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் “மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம்” என்னும் புதிய அலுவலகம் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகம் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், வேலைவாய்ப்பு முகாம்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனை போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கென பிரத்யேக ஆலோசகர்கள் மற்றும் உயர்ரக வசதிகளை இம்மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் கொண்டுள்ளது. இச்சேவைகளைப் பெற விருப்பம் உள்ளவர்கள் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஏ-28, டான்சி அலுவலகம் முதல் தளம், கிண்டி காவல்நிலையம் அருகில், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்கிற முகவரியில் அனைத்து அலுவலக நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை இம்மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : State Professional Guidance Center ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு