×

மாவட்டத்தில் 102 மி.மீ மழை பதிவு

கோவை, அக். 17: கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மதியத்திற்கு மேல் உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர், கவுண்டம்பாளையம், வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
இன்று வடகிழக்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நடப்பாண்டில், தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகளவில் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 102மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதன்படி, அன்னூர் 23மி.மீ, விமானநிலையம் 3.8மி.மீ, மேட்டுப்பாளையம் 17மி.மீ, சின்கோனா 3மி.மீ, சின்னகல்லார் 4மி.மீ, வால்பாறை 4மி.மீ, வால்பாறை தாலுகா 2மி.மீ, ஆழியார் 1மி.மீ, சூலூர் 4.6மி.மீ, கோவை தெற்கு 6.5மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 23மி.மீ, வேளாண் பல்கலைக்கழகம் 11மி.மீ என மொத்தம் 102.9 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 7.35மி.மீ மழை பெய்துள்ளது. இன்றும், நாளையும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...