×

அன்னூரில் சூறாவளி காற்று 11 லட்சம் வாழை மரங்கள் முறிந்து நாசம்

அன்னூர், அக். 17: அன்னூர் சுற்று வட்டாரத்தில் சூறாவளி காற்றுக்கு பல லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து நாசமானதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். அன்னூர் சுற்றுவட்டாரத்தில் கடந்த இரண்டு நாட்களாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதில், அல்லபாளையம் மற்றும் கோனார்பாளையம் பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் கதளி, நேந்திரம், ரோபஸ்டா ரக வாழை மரங்கள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை முறிந்து நாசமானது. இவை இன்னும் 2 மாதத்தில் நன்கு வளர்ந்து ஒரு தார் ஒன்றுக்கு 500 முதல் 600 வரை விற்பனை செய்யக்கூடியவை. தற்போது ஏற்பட்ட சேதத்தால் ஒரு தாரின் விலை ரூ 100க்கு மட்டுமே விற்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒரு சில தோட்டங்களில் பழங்கள் பிஞ்சாக இருப்பதால் வியாபாரிகள் அதனை எடுக்க மறுத்து விடுவதாக விவசாயிகள் கூறினர். மேலும் விவசாயிகள் தங்கள் ஒரு ஏக்கர் நிலத்திற்கு சுமார் ஒரு லட்சம் வரை செலவு செய்து ஒரு வருடம் உழைப்பும் வீணாகி விட்டதாகவும், இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக வருவாய் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து விழுந்துள்ளதாக கூறினர்.

Tags : Hurricane Katrina ,
× RELATED மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே அம்பன்...