×

ஜவுளி பூங்கா அமைக்க ரூ.2.50 கோடி மானியம்

ஈரோடு, அக். 17: ஜவுளி பூங்கா அமைக்க ரூ.2.50 கோடி மானியம் பெற முதலீட்டாளர், தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு 2019ம்ஆண்டு புதிய ஜவுளி கொள்கையில் தமிழகத்தில் உள்ள ஜவுளி தொழில் சார்ந்த பகுதிகளில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் இடத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான திட்ட செலவின தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இதில் எது குறைவோ, அதற்கான நிதியை அரசு வழங்கும். இதுதொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஜவுளி பூங்கா குறைந்தபட்சம் 10 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சம் 10 ஏக்கர் நிலத்தில் அமைக்க வேண்டும் என்ற விதியினை தளர்த்தி 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள புதிய ஜவுளி கொள்கையிலும் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜவுளி தொழில் சார்ந்த முதலீட்டாளர்களும், தொழில் முனைவோர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க விரும்பும் தொழில் முனைவோர்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் திட்ட அறிவுரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, பவானி மெயின்ரோட்டில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags : textile park ,
× RELATED வேதாரண்யத்தில் ஜவுளி பூங்காவுக்கு...