×

சத்துணவு மையங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வசதிகளை செய்ய வேண்டும் சங்க கூட்டத்தில் கோரிக்கை

பெரம்பலூர், அக். 17: சத்துணவு மையங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வசதிகளை அரசு வழங்க வேண்டுமென பெரம்பலூரில் நடந்த சத்துணவு ஊழியர் சங்க போராட்ட ஆயத்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. பெரம்பலூர் துறைமங்கலத்தில் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் போராட்ட ஆயத்த மாநாடு நேற்று நடந்தது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர்(பொ) பெரியசாமி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ரஞ்சிதா வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர்கள் சின்னதுரை, செல்வம், அஞ்சலை, மாவட்ட இணை செயலாளர்கள் சித்ரா, சாந்தி, ரேவதி, துரைரங்கம் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ராஜராஜன் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கொளஞ்சி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் குமரி அனந்தன், மாவட்ட துணை தலைவர் சிவக்குமார், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஆளவந்தார், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணி யன், தேன்மொழி வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் அமுதா சிறப்புரையாற்றினார்.மாநாட்டில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ 9,000 வழங்க வேண்டும். பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். அரசுத்துறை காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.  சத்துணவு மையங்களை மூடும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். சத்துணவு மையங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வசதிகளை வழங்க வேண்டும். உணவு செலவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் மணிமேகலை நன்றி கூறினார்.

Tags : meeting ,nutrition centers ,cooking gas connection facilities ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...