×

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல கல்லூரி மாணவியர் விடுதியில் கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர்,அக்.17: பெரம்பலூர் மாவட்டத்தில் 40ஆதிதிராவிட நல மாண வ, மாணவியர் விடுதிக ளும், 33மிகவும் பிற்படுத் தப்பட்டோர் நல மாணவ, மாணவியர் விடுதிகளும் உள்ளன. இந்நிலையில் நேற்று பெரம்பலூரில் உள்ள ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியி னர் நல கல்லூரி மாணவியர் விடுதி மற்றும் அதே வளாகத்தில் அமைந்துள்ள மிகவும் பிற்படுத்தபட்டோர் நல கல்லூரி மாணவியர் விடுதி ஆகியவற்றிற்கு பெரம்பலூர் கலெக்டர் சாந்தா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது விடு தியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், மாணவிகளின் வருகைப் பதிவேடு குறித்தும், விரிவாக ஆய்வு மேற்கொண்டார். வருகை பதிவேட்டில் உள்ள வருகைக்கு ஏற்ப உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ள னவா என்று பார்வையிட் டார்.

மேலும், சமையல் செய்யும் அறை மற்றும் உணவருந்தும் கூடம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா, குடிநீர் சுத்தமாக பராமரிக்கபட்டு வழங்கபடுகிறதா எனவும் கலெக்டர் சாந்தா பார்வையிட்டு ஆய்வுசெய்து, டெங்கு காய்ச்சல் விடுதியில் உள்ள மாண விகளுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் விடுதிவளாகத்தினை தூய்மையாக பராமரிக்க வேண்டுமெ ன்று விடுதிக் காப்பாளருக்கு அறிவுறுத்தினார்.மேலும், விடுதியில் தங்கி பயிலும், மாணவிகளின் கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்து, படிப்பதற் கான உகந்த சூழல் விடுதியில் உள்ளதா கேட்டறிந்து, விடுதியில் தங்கிபயிலும் அனைவரும் தங்கள் படிப்பில் முழு கவனமும் செலுத்தி தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள அறிவுருத்தினார். ஆய்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவ லர் மஞ்சுளா, மாவட்ட பிற்ப டுத்தபட்டோர் நல அலுவ லர் விஜயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Tribal Welfare College Students Hostel ,
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...