×

நாற்றுகளின் வேரில் நுண்ணுயிரினை நனைத்து நடவு செய்தால் அதிக மகசூல் பெறலாம் விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்

அரியலூர்,அக்.17: அரியலூர் மாவட்டத்தில் சம்பாசாகுபடியில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் பயிர்கள் நன்கு வளர நடவுக்கு முன் நாற்றுகளின் வேரில் சூடோமோனாஸ் மற்றும் நுண்ணுயிரினை நனைத்து நடவு மேற்கொண்டால் அதிக மகசூல் பெறலாம் என்று வேளாண்மை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி பருவத்திற்காக வளர்க்கப்பட்ட நாற்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகியது, விதை விதைப்பதற்கு முன்னர் விதை நேர்த்தி செய்து விதைத்தால் பயிரை தாக்ககூடிய நோய் காரணிகளிருந்து பாதுகாக்க முடியும். அப்படி விதை நேர்த்தி செய்யமல் தவற விட்டவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு நாற்று வேர்களை சூடோமோனாஸ் கரைசலில் நனைத்து நேர்த்தி செய்து நடுவதன் மூலம் பயிர்களில் மண். தண்ணீர் மற்றும் பண்ணை கருவிகளின் மூலம் பரவும் நோய்காரணிகளிருந்து பாதுகாக்கப்படுகிறது, எனவே நோய் தாக்குதல் இன்றி வாளிப்பான பயிர்கள் பெற நாற்றுகளை நேர்த்தி செய்ய வேண்டும்.

சாகுபடி செய்யும் நிலத்தில் அதிகப்படியான நன்மை மற்றும் தீமை செய்யும் நுண்ணுயிரிகள் மற்றும் பாக்டீரியாக்கள் உள்ளன. இவைகள் மண்ணில் இருந்து கொண்டு இறந்த உயிரினங்கள் செடிக்கொடிகள் மற்றும் பழைய எச்சங்களை மக்க செய்யும் மகத்தான வேலையினை செய்கின்றன. மேலும் நாம் நிலத்தில் விதைக்கும் நாற்றுகளை தாக்கி நோய்களை உண்டாக்கி பலத்த சேதத்தை விளைவிக்ககூடிய தீமை செய்யும் நோய்காரணிகளும் உள்ளன.எனவே அவற்றின் தாக்குதலில் இருந்து பயிர்களை காப்பாற்றவும், அதிக மகசூலை பெறுவதற்கும் நாம் ஆரம்பத்தில் நாற்று வேர்களை நுண்ணுயிரிகளுடன் நனைத்து நேர்த்தி செய்வதனால் தவிர்க்கலாம்,

உயிர் பூஞ்சான நாற்று 40 லிட்டர் தண்ணீரில் 5 பாக்கெட் அஸோஸ்பைரில்லம் மற்றும் 5 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா கலந்து கரைசலை தயாரித்து, அக்கரைசலில் நாற்றுகளின் வேர்பாகம் நன்கு நனையுமாறு 15-30 நிமிடங்கள் வைத்திருந்து நடவு செய்ய வேண்டும், இவ்வாறு செய்வதனால் தரமான வீரியமான, செழிப்பான பயிர்கள் பெறலாம்.ரசாயன நோய் மருந்துகள் பயன்படுத்த தேவையில்லை. மேற்கண்ட முறைகளை பயன்படுத்தி நடவு செய்வதன் மூலம் மண்மூலம் பரவும் நோய்கள் தடுக்கப்படுவதுடன் நல்ல மகசூலை பெறலாம். இவ்வாறு வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது