×

தீபாவளி பட்டாசு வெடி விபத்து நிகழ்ந்தால் உதவி செய்து உயிர்களை காப்பாற்ற தீயணைப்பு துறையினர் தயார் தகவல் தொலைபேசி எண்கள் அறிவிப்பு

பெரம்பலூர், அக்.17: தீபாவளி பட்டாசு வெடிக்கும்போது, வெடிவிபத்து மறறும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினரை அழைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர், அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான தமிழ்நாடு தீயணை ப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலர் தாமோதரன் வெளியிட்டு அறிவிப்பில் தெரிவித் திரு ப்பதாவது : தீபாவளிப் பண்டிகை வருகிற 27ம்தேதி வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. உள்ளங்களிலும், இல்லங்களிலும் பெரு மகிழ்ச்சியு டன் கொண்டாடக் கூடிய தீபாவளிப் பண்டி கையை முன்னிட்டு, புத்தாடை அணிந்து, இனிப்புகளை உண்டு மகிழ்வதுபோல், பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடுவது வழக்க மாக உள்ளது. மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டிய பண்டிகையில் முறையற்ற வகையில் பட்டாசு களைக் கொளுத்தினால் அசம்பா விதங்கள், தீக்காயங்கள் நேரும் அச்சம் உள்ளது. எனவே பாதுகாப் பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது, வெடி விபத்து மற்றும் அசம்பாவிதம் ஏற்படும் பட்சத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினரை விரைந்து அழைத்தால், உடனே வந்து உதவி செய்து உயிர் களை காப்பாற்றத் தயாராக இருக்கிறோம்.

இதற்காக பெரம்பலூர் சுற்றுவட்டாரப் பகுதியினர் 94450 86441 என்ற செல்போன் எண்ணையும், 04328-224255, 04328-224101 ஆகியத் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். அரியலூர் சுற்று வட்டார பகுதியினர் 94450 86442 என்ற செல்போன் எண்ணையும், 043 29-222100, 04329-222101 ஆகிய தொலை ப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். துறையூர் சுற்று வட்டாரப் பகுதியினர் 94450 86445 என்ற செல்போன் எண்ணையும், 043 27-222401, 04327-222101 ஆகியத் தொலை ப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். ஜெயங்கொண்டம் சுற்று வட்டாரப் பகு தியினர் 94450 86443 என்ற செல் போன் எண்ணையும், 04331-250359, 04331-250101 ஆகிய தொலைப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். வேப்பூர் சுற்று வட்டாரப் பகுதியி னர் 94450 86446 என்ற செல்போன் எண்ணையும், 04328-266400, 04328-266101 ஆகியத் தொலை ப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். செந்துறை சுற்று வட்டாரப் பகுதியினர் 94450 86444 என்ற செல்போன் எண்ணையும், 04329-242399, 04329-242101 ஆகியத் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Fire Brigade ,
× RELATED குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்புகள் பிடிபட்டன