×

வாள்வீச்சில் 2 தங்கம்

அருப்புக்கோட்டை, அக். 17: மலேசியாவில் உள்ள கிடா நகரில் உலக சிலம்பம் பெடரேஷன் சார்பில், உலககோப்பை சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இந்தியா, மலேசியா, பங்காளதேஷ், கம்போடியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கு பெற்றனர். இந்த போட்டியில் மினி சப்ஜூனியர் பிரிவில், அருப்புக்கோட்டை எஸ்பிகே இன்டர்நேஷனல் பள்ளி 4ம் வகுப்பு மாணவர் பிரஜன் கலந்து கொண்டு இரட்டை வாள்வீச்சில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், குழு ஆயுத வீச்சுப்போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். இரண்டு தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்த பிரஜனை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர், பள்ளிச்செயலாளர் ராஜேஷ்குமார், உதவிசெயலாளர் காசிமுருகன், முதல்வர் ஐஸ்வர்யா தேவி மற்றும் நிர்வாகக்குழுவினர் உறவின்முறை நிர்வாகிகள் பாராட்டினர்.

Tags :
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...