×

காணை நோய் தடுப்பு முகாம்

வருசநாடு, அக்.17: தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட சீலமுத்தையாபுரம், தும்மக்குண்டு, வண்டியூர், வாலிப்பாறை போன்ற கிராமங்களில் கால்நடைகளுக்கு காணை நோய் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. கால்நடைகளுக்கான தாதுஉப்பு, சத்து டானிக், மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் தும்மக்குண்டு ஊராட்சி செயலர் சின்னச்சாமி தலைமை தாங்கி கால்நடைகளுக்கு நோய் தடுப்பு பற்றி விளக்கினார். இதில் வருசநாடு கால்நடை அரசு மருத்துவர் மதுசூதனன் மற்றும் உதவி ஆய்வாளர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தற்போது கனமழை பெய்து வருவதால் தினந்தோறும் கால்நடைகளுக்கு சிறப்பு முகாமின் அடிப்படையில் மருத்துவம் பார்க்கப்படும் என மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Immunization Campaign ,
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா