×

திருப்புத்தூரில் ரத்ததான முகாம்

திருப்புத்தூர், அக். 17: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கியும், காரைக்குடி அரசு மருத்துவமனையும், நெற்குப்பை சுகாதார நிலையமும் இணைந்து ரத்த தான முகாம் நடத்தினர். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். துணை முதல்வர் சூசைமாணிக்கம் முன்னிலை வகித்தார். முகாமில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் ரத்ததானம் செய்தனர். 1000க்கும் அதிகமான மாணவ, மாணவியர் ரத்தம் தரம் அறிதல் முகாமிலும் பங்கு கொண்டனர். இதில் மாவட்ட ரத்த வங்கி அதிகாரி சுகன்யா, காரைக்குடி டாக்டர். அருள்தாஸ், நெற்குப்பை வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்ட் ராஜ், கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் திட்டக்குழு தலைவர் கார்த்திகேயன் மற்றும பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags : Rathdana Camp ,Thirupputhur ,
× RELATED திருப்புத்தூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்