கலாம் பிறந்த நாள் விழா மாணவர்கள் பங்கேற்பு

சோழவந்தான், அக். 17:சோழவந்தான் எம்.வி.எம்.கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாள் விழா நடந்தது. பள்ளி வளாகத்தில் உள்ள கலாமின் உருவச் சிலைக்கு எம்.வி.எம். குழுமத் தலைவர் மணி (எ) முத்தையா, பள்ளி நிர்வாகி வள்ளிமயில், தாளாளர் டாக்டர் மருதுபாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதேபோல் முதல்வர் தீபாராகிணி, ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் சிலைக்கு மலர் தூவி வணங்கினர்.இதைப்போல் முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் கபிலன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரிய கழக நிர்வாகிகள் அருணாச்சலம், மார்நாட்டான் ஆகியோர் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன், அரிமா சங்க நிர்வாகி சுந்தர், இயற்கை ஆர்வலர் விஜய பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் தென்கரை கன்மாய் பகுதியில் ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தனர். இதில் சாரணர் படை பயிற்சியாளர் ராஜேஷ்குமார், சமூக ஆர்வலர்கள் ரவி, மணிவண்ணன், மதுரை லயன்ஸ் சங்கத்தினர்,சாரணர் படை மாணவர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>