பாடாய் படுத்தும் மர்ம காய்ச்சல்

மதுரை, அக். 17: மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் காய்ச்சல் நோயாளிகளில் 25 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டால் 30 பேர் அட்மிஷன் ஆகிவிடுகின்றனர். இதனால் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  மதுரை மாவட்ட அளவில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சல்கள் தீவிரமாக பரவி வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மதுரையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரை காய்ச்சல் நோயாளிகள் அதிகளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் மட்டும் பல்வேறு வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்ட 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.  இதில் 10க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு, காய்ச்சல் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது.  அரசு மருத்துவமனை மூத்த டாக்டர் ஒருவர் கூறுகையில், ``பல்ேவறு வைரஸ் காய்சலுக்கு தினமும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். இதில், 30க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் சுமார் 25 பேர் வரை டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். 25 பேர் வெளியே செல்லும் நிலையில், 30 பேர் உள்ளே வருவதால், காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலை பொருத்தவரை 10க்கும் மேற்பட்டோருக்கு உறுதி ெசய்யப்பட்டிருந்தாலும் மேலும் சிலருக்கு டெங்கு அறிகுறி உள்ளது. இவர்களுக்கு தினமும் ரத்தப்பரிசோதனை செய்யப்படுகிறது’’ என்றார்.

Related Stories: