×

“காவலர் நீத்தார் நினைவு நாள்” 5 கிலோ மீட்டர் ஓட்டம்

மதுரை, அக். 17: “காவலர் நீத்தார் நினைவு நாள்” ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம், மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி மாநகர காவல்துறையினரால் 5 கிலோ மீட்டர் ஓட்டம், வரும் 20ம் தேதி (ஞாயிறு) காலை 6 மணியளவில் நடத்தப்பட உள்ளது. இந்த ஓட்டம், தமுக்கம் மைதானத்திலிருந்து துவங்கி கோரிப்பாளையம், பனகல் சாலை, ஆவின் சந்திப்பு, கே.கே.நகர் பிரதான சாலை, அண்ணாநகர் காவல்நிலையம் வழியாக, கே.கே. நகர் வளைவு, மாவட்ட நீதிமன்றம் வழியாக, ரேஸ்கோர்ஸ் சாலை, அழகர்கோயில் சாலை, தல்லாகுளம் பெருமாள் கோயில் வழியாக தமுக்கம் மைதானத்தில் முடிவடைகிறது.
முதலில் பதிவு செய்யும் 1500 நபர்களுக்கு இலவசமாக டி சர்ட் வழங்கப்படுகிறது. மேலும், இதில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடிக்கும் நபர்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும், பதக்கமும் போலீஸ் கமிஷனர் வழங்குவார். பங்குபெறும் அனைவருக்கும், சான்றிதழ்கள் வழங்கப்படும்.
 
இதனைதொடர்ந்து, மறுநாள் (21ம் தேதி) 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு “காவல் துறை” சார்ந்த தலைப்பின் கீழ் கட்டுரை போட்டிகள் (தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில்) காலை 10 மணி முதல் 12 வரை தமிழ்நாடு ஆண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தப்படுகிறது. இதில் வெற்றிபெறும் முதல் 3 நபர்களுக்கு  ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும் மற்றும் பதக்கமும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு forms.gle/WFJzpp2byTgFq3Nw8 என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ள வேண்டும். மேலும், அதில் அனைத்து விபரங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேற்கண்ட தகவலை மாநகர் காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags : run ,Guard Neutral Memorial Day ,
× RELATED வங்கதேசத்துக்கு 511 ரன் இலக்கு: தனஞ்ஜெயா கமிந்து ஜோடி மீண்டும் அசத்தல்