×

கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் தமிழ்த்துறை மாணவிகளுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரி, அக்.17: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ்த்துறை முதுகலை மாணவிகளுக்கு 3 நாட்கள் குறுகிய கால கல்வெட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழி என்னும் பிராமி எழுத்துக்கள் தொடங்கி வட்டெழுத்து, அண்மைக்கால கிரந்த எழுத்துக்கள், தமிழ் எண்கள் வரை அனைத்து எழுத்துக்களும் படிப்படியாய் வளர்ந்து இன்றைய வடிவத்தை அடைந்த வரலாற்றை அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் மாணவியருக்கு விளக்கிக் கூறினார். மூன்றாம் நாளான நேற்று காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரமடம் சிவன் கோயிலுக்கு மாணவியரை களப்பயணமாக அழைத்துச்சென்று கோயிலில் உள்ள குலோத்துங்க சோழன் கல்வெட்டை படியெடுத்து படிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் கோயில் கட்டடக்கலை, சிற்பங்களின் அமைப்பு மற்றும் வரலாறு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.பயிற்சிப் பெற்ற 35 மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அரசுப் பெண்கள் கலைக் கல்லூரி தமிழ்த்துறை கவுரவ விரிவுரையாளர் உமாதேவி, அருங்காட்சியகப் பணியாளர்கள் கிருஷ்ணன், செல்வகுமார், மற்றும் கோவில் குருக்கள் மோகன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Tamil ,Krishnagiri Museum ,
× RELATED தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு