×

2020ம் ஆண்டிற்கான தொழிற்சாலைகளின் உரிமம் புதுப்பிக்க 31ம் தேதி கடைசி நாள்

நெல்லை, அக். 17: திருநெல்வேலி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் ெவளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள் 2020ம் ஆண்டுக்கான உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வரும் அக்டோபர் 31ம் தேதி கடைசி நாளாகும். உரிமத்தை புதுப்பிக்க இந்த துறையின் இணையதளத்தில் (https://dish.tn.gov.in) விண்ணப்ப படிவம் 2ல் உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். உரிமத்தொகையை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் டிடி உடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். உரிமத்தை புதுப்பிக்க ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 2019 அக்டோபர் 31ம் தேதிக்குள் திருநெல்வேலி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்தில் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

உரிமத்தை புதுப்பிக்க காலதாமதம் ஆனால் அடுத்த மாதம் (நவம்பர்) பெறப்படும் விண்ணப்பத்துக்கு உரிம கட்டணத்துடன் 10 சதவீதம் தாமத கட்டணமும், டிசம்பர் மாதம் பெறப்படும் விண்ணப்பத்துக்கு உரிம கட்டணத்துடன் 20 சதவீதம் தாமத கட்டணமும் செலுத்த வேண்டும். மேலும் தொழிற்சாலை உரிமம் காலாவதியான பின்னர் பெறப்படும் விண்ணப்பத்துக்கு 30 சதவீதம் தாமத கட்டணம் செலுத்த வேண்டும். எனவே தொழிற்சாலை உரிமையாளர்கள் 2019 அக்டோபர் மாத இறுதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தை 3 நகல்களில், ஒரு நகலில் ரூ.5க்கான நீதிமன்ற கட்டணவில்லை ஒட்டி (joint Director, Industrial Safety & Health payable at Tirunelveli) என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags :
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது