×

களக்காடு பகுதியில் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது

நெல்லை, அக். 17: பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது என்று களக்காடு பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து நேற்று களக்காடு வடுகச்சிமதில் பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் எத்தனையோ ஆட்சிகள் நடந்துள்ளன. இதில் நல்லாட்சி நடத்தியது யார் என்பது உங்களுக்கு தெரியும். எம்ஜிஆர் மக்களுக்கு எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்தார். அவருக்கு பின்னால் ஜெயலலிதாவும் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தினார். இந்த ஆட்சியின் நன்மைகளை சீர்தூக்கி பார்க்க வேண்டும். காவிரி நதிநீர் பிரச்னையில் கர்நாடகாவை எதிர்த்து நடுவர் நீதிமன்றம் அமைத்தோம். அதன் இறுதி தீர்ப்பை கெஜட்டில் வெளியிட சட்ட போராட்டம் நடத்தி அரசாணை பெற்று தந்தவர் ஜெயலலிதா. கர்நாடகத்தில் காங்கிரஸ் மேகதாது அணையை கட்டுவோம் என கூறுகிறது.  காங்கிரசின் இரட்டை நிலையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  அதிமுகவின் திட்டங்கள் அனைத்தும் தொலைநோக்கு பார்வை கொண்டவை. மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள். பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை அதிமுக அரசு அள்ளி தந்துள்ளது.

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், பட்டதாரி பெண்களுக்கு நிதியுதவி, பேறுகால நிதியுதவி ரூ.18 ஆயிரமாக உயர்த்தியது என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பெண்களுக்கு சம நீதி, சம பாதுகாப்பு என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. குருவிக்கு கூட வீடு உள்ள நிலையில் தமிழகத்தில்  வீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 2023ம் ஆண்டுக்குள் தரமான உறுதியான கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. குடிசை வீடுகளே இல்லாத கிராமங்கள் தமிழகத்தில் விரைவில் உருவாகும்.கிராம பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் இந்த அரசு பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளது. ஏழைகளுக்கு இலவச வெள்ளாடு, செம்மறி ஆடு, பசுமாடு, மானிய விலையில் ஸ்கூட்டர், தை பொங்கலுக்கு பரிசு பொருட்களுடன், ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை எதையுமே குறைக்காமல் செயல்படுத்தி வருகிறோம்.

தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றினோம். 8 ஆண்டுகளில் எங்கள் சாதனைகளை எண்ணி பாருங்கள். சாதனைகள் தொடர நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி, தங்கமணி, பாடநூல் வாரிய தலைவர் வளர்மதி, மாநகர் மாவட்ட ெசயலாளர் தச்சை கணேசராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன், இட்டமொழி டென்சிங், புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற ெசயலாளர் பெரியபெருமாள், களக்காடு ஜெயராமன், வடுகட்சி மதில் கண்ணன், ராமசாமி, தமாகா கோவை தங்கம், விடியல்சேகர் உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர்.

Tags : government ,AIADMK ,women ,constituency ,candidate ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...