×

8462 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் மூன்றாண்டுக்கு தொடர் நீட்டிப்பு

நாகர்கோவில்: தமிழகத்தில் 8462 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2011-12ம் ஆண்டில் அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளிகளுக்கு 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு 6752 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் சேர்த்து மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதை எதிர்நோக்கி கூடுதலாக 120 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு செய்யப்பட்டன.

இந்த பணியிடங்களுக்கு தற்காலிக நீட்டிப்பு 31.12.2018 உடன் முடிவடைந்ததால் இப்பணியிடங்களுக்கு 1.1.2019 முதல் மேலும் மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளி கல்வி இயக்குநர் அரசை கேட்டுக்கொண்டிருந்தார். இந்தநிலையில் இந்த 8462 தற்காலிக பணியிடங்களுக்கு 31.12.2022 வரை தொடர் நீட்டிப்பு செய்து ஆணையிடுகிறது’ என்று அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மத்தியஅரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் மத்திய அரசை கண்டித்து இடதுசாரிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு,  இடதுசாரிகள் சார்பில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ₹1.40 லட்சம் கோடி ரூபாய் வரிசலுகை வழங்கிய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர்  செல்லசுவாமி தலைமை வகித்தார்.  இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் அந்தோனிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  எம்.எல்.ஏக்கள் லீமாறோஸ், நூர்முகம்மது ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Tags :
× RELATED தமிழ்நாட்டில் முதல் முறையாக ரோஜாவனம்...