×

நாகர்கோவிலில் தேசிய கராத்தே போட்டி 19,20ம் தேதிகளில் நடக்கிறது

நாகர்கோவில்: இந்திய  சோட்டோகான் கராத்தே டூ இன்டர் நேஷனல் பெடரேஷன் சார்பில் தேசிய அளவிலான  கராத்தே போட்டி வரும் 19, 20 தேதிகளில் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி  இன்ஜினியரிங் கல்லூரியில் நடக்கிறது. தொடக்க விழாவில் மாவட்ட ஜூடோ சங்க  இணைச்செயலாளர் செந்தூர் பாண்டியன் தலைமை வகிக்கிறார். மாவட்ட ஜூடோ சங்க  தலைவர் தொழிலதிபர் கேட்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

குமரி  மாவட்ட விளையாட்டு அதிகாரி டேவிட் டேனியல், உடற்கல்வி ஆய்வாளர் ஜெபராஜ்,  தமிழக போலீஸ் கராத்தே அணி பயிற்சியாளர் மோகன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி  வைக்கின்றனர். போட்டியில் தமிழகம், கேரளம், ராஜஸ்தான், அரியானா உட்பட 11  மாநிலங்களை சேர்ந்த கராத்தே வீரர், வீராங்கனைகள் மற்றும் தமிழக போலீஸ்  கராத்தே அணியும் கலந்து கொள்கின்றனர். பல்வேறு பிரிவுகளில் ஆண்கள்,  பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டி நடுவராக  டெல்லி மாநில சோட்டோகான் கராத்தே செயலாளர் பிரவின் ஷைனி செயல்படுகிறார்.  போட்டிகளில் கலந்து கொள்ள விருப்புபவர்கள் 19ம் தேதி காலை 7.30 மணிக்கு,  தங்கள் வயது சான்றிதழுடன் பதிவு செய்து கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட  கராத்தே சங்க செயலாளர் ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.

Tags : National Karate Competition ,Nagercoil ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு