×

குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டர் பேச்சு சிறுதானியம், இயற்கை உணவுகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும் உலக உணவு தின நிகழ்ச்சியில் வலியுறுத்தல்

தோகைமலை, அக். 17: சிறு தானியங்கள், இயற்கை உணவுகளை அதிக அதோகைமலை அருகே புழுதேரி வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் உலக உணவு தினம் மற்றும் முட்டை தினம் நிகழ்ச்சி நடந்தது.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே புழுதேரியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையம், கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக உலக உணவு தினம் மற்றும் முட்டை தினம் குறித்த நிகழ்ச்சி நடந்தது. மைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நபார்டு வங்கி உதவி பொதுமேலாளா் பரமேஸ்குமார் தலைமை வகித்து பேசினார். தோட்டக்கலை துணை இயக்குனா் மோகன்ராம், போராசிரியர் வசந்தகுமார், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவா் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் உலகில் உணவு இன்றி ஒருவரும் இறக்க கூடாது, அனைவரும் சரிவிகித சத்துள்ள உணவினை உட்கொள்ள வேண்டும், சிறுதானியங்கள் மற்றும் இயற்கை உணவுகள் உண்பதனை அதிகரிக்க வேண்டும், தினம்தோறும் முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், காடை முட்டையில் உள்ள சத்துக்கள், சமைக்கும் போது காய்கறிகளிலிருந்து சத்துக்கள் வீணாகாமல் சமைப்பது எப்படி, வானவில் வண்ண உணவு வகைகள், உடலுக்கு தேவையான சத்துக்கள் மற்றும் காய்கறிகள், பழங்கள் உண்பதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் பல்வேறு விளக்கங்கள் அளித்தனர்.மேலும் உலக உணவு தினம் குறித்து காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் சிறுதானிய உணவு வகைகள் சமைத்தல் குறித்த சமையல் போட்டி நடைப்பெற்று, இந்த போட்டியில் சுவையாகவும், ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகளை சமைத்த சேப்பலாப்பட்டி விஜயலட்சுமிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொழில்நுட்ப வல்லுநர் தமிழ்செல்வி மற்றும் வேளாண் அறிவியல் மைய தெழில்நுட்ப வல்லுநா–்கள் கலந்துகொண்டு உலக உணவு தினம் மற்றும் முட்டை தினம் குறித்து தொழில்நுட்பம் குறித்து பேசினர். இதில் 60 விவசாயிகள் மற்றும் கிராமப்புற பெண்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Tags : Speaker ,World Food Day ,event ,
× RELATED ராஜஸ்தான் சபாநாயகருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்