×

பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது

கரூர், அக். 17: மாற்றுத்திறனாகளிக்கு சுயதொழில் துவங்க கடனுதவி வழங்கப்படுகிறது என குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டர் கூறினார்.கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கரூர்கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்து பேசியதாவது: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அவர்களுக்கு சுயதொழில் தொடங்கவும் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு தேவையான செயற்கை கால், காதொலிக் கருவிகள், சர்க்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் என பல்வேறு உபகரணங்களும் வழங்கப்படுகிறது. எனவே, மாற்றுத்திறனாளிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இந்த முகாமில், சிறப்பு சக்கர நாற்காலி, பார்வையற்றோர்களுக்கான நவீன ஊன்றுகோல், பிரெய்லி கடிகாரம், பராமரிப்பு உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை, பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் வீட்டு மனைப்பட்டா என பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமான மனுக்கள் பெறப்பட்டன. உபகரணங்கள் கேட்டு விண்ணப்பித்த நபர்களுக்கு உடனடியாக அவர்களுக்கான உபகரணங்கள் வழங்கிட வேண்டும் எனவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

இதனடிப்படையில், 5 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஒரு பயனாளிக்கு ரூ. 3400 மதிப்புள்ள அதிரும் மடக்குகோல், நல்ல நிலையில் உள்ள நபர் மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொண்டதற்காக 2 பயனாளிகளுக்கு ரூ. 37,500 மதிப்பிலான தேசிய சேமிப்பு பத்திரம், 2 பயனாளிகளுக்கு ரூ. 470 மதிப்பிலான நவீன மடக்கு கோல், ஒரு பயனாளிக்கு ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் உட்பட அனைத்து அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Tags : welfare activists ,
× RELATED தமிழகத்தில் விரைவில் நகரும் ரேஷன்...